துறையூர் அருகே காதல் திருமணம் செய்த ஆசிரியை இன்ஸ்டாகிராம் கள்ள காதலனுடன் ஓட்டம்



திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு செங்காட்டுப்பட்டி பகுதியில் வசிக்கும் நதியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.

நதியா நர்சிங் முடித்துள்ளார். தற்போது கோம்பைபுதூரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். இந்நிலையில் நதியா அதிக நேரம் செல்போனில் பொழுதைக் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராமில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக திடீரென நதியாவை காணவில்லை. இதனால் நதியாவை கணவர் உள்பட உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கணவர் புஷ்பராஜ் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் குறும் செய்தி ஒன்று வந்துள்ளது.

அதை பார்த்த கணவர், நதியா பிராகாஷ் உடன் சென்னை செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் தகவல் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பராஜ் அதனை துறையூர் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓடிய அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியை நதியாவை தொலைபேசி எண்ணைக் வைத்து தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை வேறொரு நபருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post