துறையூர் அருகே கணவருடன் பிரிந்து வாழ்ந்து இரவு நேரத்தில் மாணவனுடன் பேச்சு ; ஆசிரியை போக்சோவில் கைது

 

திருச்சி மாவட்டம் அடுத்த  கோட்டப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி (38) எம்எஸ்ஸி பிஎட் பட்டதாரி ஆவார். துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் பணி நிமித்தம் காரணமாக துறையூர் சித்திரைப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தனது இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்த வாழ்ந்து வருவதாக தெரிகிறது. 

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகள் நடத்தியதின் மூலம் மாணவர்களிடையே நெருக்கமானதாக தெரிய வருகிறது. இவரிடம் படித்த துறையூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர்கள், தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்ததன் பேரில், இரவு நேரங்களில் ஆசிரியையுடன் அதிக நேரம் பேசி வருவதும், படிப்பில் கவனமில்லாததாலும், ஆசிரியையின் மீது மாணவனின் பெற்றோர்கள் புகாரளித்தனர். புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின் அடிப்படையில் ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தி்ன் கீழ் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவனை சிறார் சிறையில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.


Post a Comment

Previous Post Next Post