சமயபுரம் அருகே தங்கையை காதலித்த வாலிபரை கத்தியால் குத்திய அண்ணன் - ஆபத்தான நிலையில் வாலிபர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மருதூர் நேரு நகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் பூமிநாதன் (26). அதே பகுதியை சேர்ந்த குமரவேல் மகன் பிரேம்குமார் (24). பிரேம்குமாரின் தங்கையை பூமிநாதன் காதலித்து வருவதாகவும், இதனால் பிரேம்குமார் பூமிநாதன் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் பூமிநாதன் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றபோது அங்கு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த பிரேம்குமார் பூமிநாதனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பூமிநாதன் தட்டி கேட்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூமிநாதனை குத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பூமிநாதன் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனைத்தொடர்ந்து பிரேம்குமார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த கிராம மக்கள், பலத்த காயமடைந்த பூமிநாதனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post