ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி ; அவசர பிரிவில் சிகிச்சை - மருத்துவமனை சார்பில் அறிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இளங்கோவனின் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post