தனியார் பள்ளிகளில் இலவசமாண வர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுவரும் ஏப்ரல் மாதம் தொடங்க வுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலவச கட்டாயக்கல்வி உரி மைச் சட்டத்தின்படிதனியார் பள்ளி களில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரு பவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்ட ணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம். இவர்களுக்கான கல் விக் கட்டணமாக தனியார் பள்ளி களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.350 கோடி வழங்கப்படுகிறது. இதற்கிடையே வரும் கல்வியாண்டு (2023-24) இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும் போது, “ஆர்டிஇ திட்டத்தின் கீழ் நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இணையவழி யில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வலைதள வடிவ மைப்பு உட்பட முன்னேற்பாடு கள் தற்போது முடுக்கிவிடப்பட் டுள்ளன.
இந்த பணிகளை முடித்து ஏப்ரல் 3-வது வாரம் முதல் விண் ணப்பப் பதிவை தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெற்றோர், பள்ளிசேர்க்கைக்குத் தேவையான சாதி, இருப்பிடம், வருமான சான்றி தழ் உள்ளிட்ட ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்து கொள்ள வேண்டும்” என்றனர்.