தனியார் சேனல்களில் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாடத்த்தில் விஜய் டிவி, சன் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தமிழ் போன்ற கட்டண சேனல்களின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்.டி.03 யில் பரிந்துரைதுள்ளது. இதை வாய்பாக பயன்படுத்திக் கொண்ட சேனல் நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள், சேனல்களின் கட்டணத்தை மிகவும் அதிகமாக உயர்த்தி பொதுமக்களின் தலையில் தாங்க முடியாத அதிகமான சுமையை ஏற்றி உள்ளார்கள்.
கேபிள் டிவி ஆபரேட்டர்களாகிய நாங்கள் பு-யல், மழை, வெயில், இரவு பகல் பாராமல் மக்களுக்காக சேவை செய்கிறோம். இந்த சேவைக்காக தனியாக எங்களுக்கு கட்டணம் தர வேண்டும் என்று நாங்கள் இதுவரை எந்த கேபிள் டிவி வாடிக்கையாளர்களையும் கட்டாயப்படுத்தியதில்லை, வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் தொகை கட்டண சேனல்களின் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, செலுத்துவதற்கே, போதுமானதாக இல்லை, என்ற சூழ்நிலைதான் உள்ளது.
ஆனால், கட்டண சேனல்களாக உள்ள ஒவ்வொரு சேனல்களும், விளம்பரம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்களை லாபமாக ஈட்டிக்கொண்டு. மாதாந்திர கட்டணத்தையும் உயர்த்துவது அதிகபட்ச நியாயமற்ற செயலாகும்.
இந்த அநீதியை தடுத்து நிறுத்த அதிகாரம் படைத்த மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்ட கொள்ளைக்கு துணை போகிறது இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என கூறினர்.
போராட்டத்தில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.