மூவராயன்பாளையத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய ஆசிரியை மீது வழக்கு பதிவு

 


தமிழக கல்வித்துறை பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்களின் சான் றிதழ்களை சரி பார்க்கும் படி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் அதி காரிகள் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன் பாளையம்தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் துறையூர் அருகே உள்ள மதுராபு (49) என்பவரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அப் போது 1997ம் ஆண்டில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த சகாய சுந்தரி, ஆசிரியர் பயிற்சி படித்ததற்கான சான்றிதழ் போலியாக வழங்கியது தெரியவந்தது.

இதுதொடர்பாக முசிறி தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட பொரு ளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ்சார் சகாய சுந்தரி மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் வழக்கு பதிந்த நிலையில், ஆசிரியை சகாய சுந்தரியை மாவட்ட கல்விநிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை யும் நடைபெற்று வருகி றது. போலி சான்றிதழ் கொடுத்து கடந்த 26 ஆண் டுகளாக ஆசிரியையாக பணியாற்றியது கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post