பெரமங்கலத்தில் குடிநீர் வினியோகம் இல்லாததால் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு


முசிறி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பெரமங்கலம் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆனால் குடிநீர் வினியோகம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது தொடர்பாக இந்த கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொள்ளாமல், கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற ஊழியர்களை கொண்டு கிராம சபை கூட்டத்தை நடத்தி முடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களில் சிலர், நாங்கள் இல்லாமல் கூட்டத்தை முழுமையாக நடத்தி முடிக்கக்கூடாது. மீண்டும் கிராம சபை கூட்டத்தை மற்றொரு நாள் நடத்த வேண்டும். இது பற்றி மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுப்போம், என்று கூறினார்கள். 

இதனால் பகல் 12 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த கிராம சபை கூட்டம் பாதிலேயே முடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





Post a Comment

Previous Post Next Post