துறையூர் அருகே ஆவி பிடித்த போது மூச்சு திணறி பள்ளி சிறுமி பலி



திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் லாரி டிரைவர். இவரது மகள் துர்கா ஸ்ரீ (4) இவர். ரிச்சட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சளி இருமல் அதிகமாக இருந்ததாகவும், கூறி கொப்பம்பட்டியில் உள்ள தனியார் மெடிக்கலில் சளிக்காக ஆவி பிடித்துள்ளார்.

மேலும் அங்கிருந்து சொந்தமாக மருந்து மாத்திரைகளும் வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (02.01.2023) நள்ளிரவில் பள்ளி சிறுமி மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைபற்றி உடற் கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் பள்ளி சிறுமியின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொப்பம்பட்டி கிராமத்தில் அரசு பெண் மருத்துவர் கிளினிக் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். மெடிக்கல் கிளினிக் ஒரு நர்ஸ் ஒரு உதவியாளரை கொண்டு நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் டாக்டர் இல்லாதபோது நர்ஸ் மருத்துவம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post