மாணவிக்கு திருமணத்துக்கு முன்பே காதலால் இக்குழந்தை பிறந்துள்ளதாகவும், வெளியே தெரியாமல் மறைக்க குழந்தையை ஆற்றங்கரையில் வீசியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து, போலீசார் விசாரிப்பதை அறிந்த அந்த மாணவி, கடந்த 8ம் தேதி வீட்டில் விஷம் குடித்ததாக, ஆபத்தான நிலையில் கலைவாணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலைவாணி பரிதாபமாக இறந்தார். முன்னதாக அவரின் உடல்நிலை மோசமானதால், திருச்சி குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றார். இதனை தொடர்ந்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவி குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்திருக்கலாம் என்ற தகவல் வெளியானது.
மாஜிஸ்திரேட்டிடம் மாணவி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், மாணவியின் தந்தை செல்வமணி (47), அத்தை மல்லிகா (51), ஆகியோரை ஜீயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.