திருவெள்ளரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை பண்பாட்டு திருவிழா நேற்று நடைபெற்றது.
தமிழக அரசின் பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் இம்மாதம் 23:ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கலை பண்பாட்டு திருவிழா நடைபெறுகிறது. இதன்படி நேற்று திருவெள்ளரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை பண்பாட்டு திருவிழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர்(பொ) ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் லதா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலா மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை எழுதுதல், இசை வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, இசை கருவிகள் இசைத்தல், நடனம், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில் உதவி தலைமையாசிரியர் லில்லிரோஸ்லின்மேரி நன்றி கூறினார். மேற்கண்ட போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றிபெறும் மாணவ மாணவிகள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளலாம். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளிலும், மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெறலாம்.