காவல் உதவி ஆய்வாளர்  கையெழுத்தை போலியாக போட்ட இரண்டாம் நிலை காவலர்  பணியிடை நீக்கம்

 


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் செல்வராஜ். இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் கொடுக்க தினமும் வந்து செல்கின்றனர். சான்று ஆவணங்கள், செல்போன்கள் போன்றவற்றை தவறவிட்டவர்கள் இது குறித்து புகார் கொடுத்து நிவாரணம் பெற முறையிடுவது வழக்கம்.

இந்நிலையில் இதுபோன்ற புகார் கொடுக்க வருபவர்களிடம் செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் புகார்தாரருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் காவல் உதவி ஆய்வாளர் அருண் என்பவரது  கையெழுத்தை போலியாக போட்டு இரண்டாம் நிலை காவலர் செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விசாரணை செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் , இரண்டாம் நிலை காவலர் செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து  உத்தரவிட்டார். இரண்டாம் நிலை காவலர்  செல்வராஜ் மது விலக்கு பிரிவு, லால்குடி, துவரங்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post