தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில செயற்குழு கூட்டம் உறையூர் வெக்காளி அம்மன் கோவில் அருகே ஓம் சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில சங்க கட்டிடப்பணி கீழ்தளம் நிறைவறும் தருவாயில் உள்ளதால் அதற்கான நிதியை ஒவ்வொரு மாநில, மாவட்ட நிர்வாகிகளும் ஏற்கனவே கொடுக்க ஒப்புக்கொண்டதை இந்த கூட்டத்திற்கு முன்பாகவே கொடுத்துவிட்டு அதை கூட்டத்தில் பதிவு செய்யப் பட்டது
மாநில சங்க அரங்கம் திறப்பு விழா தேதியை உறுதி செய்ய பட்டது.
திறப்பு விழாற்கு யாரையெல்லாம் அழைப்பது என்று பொதுக்குழுவின் கருத்துக்கள் பெறப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விகிதாச்சாரப்படியும், இதுவரை மந்திய, மாநில அரசுப் பணிகளில் பங்கு பெற்றதையும் கருத்தில் கொண்டு முத்தரையர உட்பிரிவு சாதிகள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக ஏற்படுத்தி உள் இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த எந்த வழிமுறைகளை கையாளவது என்று தீர்மானிக்கபட்டது.
கூட்டத்திற்கு
மாநில தலைவர் அம்பலத்தரசு தலைமை தாங்கினார்,
மாநில பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலையில், மாநில பொது செயலாளர் வரவேற்று பேசினார்.
முடிவில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கிளியநல்லூர் ராஜேந்திரன் நன்றியுரை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் உள்ள மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.