மத்திய அரசின் கீழ் பிரதம மந்திரி உஸ்மான் பாரத் என்ற காப்பீடு திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
பதிவு செய்ய ஒரு கார்டுக்கு இலவசமாக மட்டுமே செய்ய வேண்டும் என்று நிர்ணயம் உள்ளது.
ஆனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கூடுதல் வசூலாகவும் பண மோசடி செய்து வருகிறார்கள்.
கடந்த மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம்
அதிக பணம் வசூல் செய்ததாக கூறி பெரம்பலூர் மாவட்ட விஎல்இ அசோசியேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரிடம் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் ஊராட்சியில் தனி நபர் ஒருவர் மத்திய அரசு காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 100 ரூபாய் வசூல் செய்வதாக முதலிபாளையம் மண்டல தலைவர் பாஜக மண்டல தலைவர் சரவணனுக்கு தகவல் கிடைத்ததும் அங்கு சென்று இதுபோல் வசூல் செய்யக்கூடாது என்று கூறி பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை திருப்பி அளிக்குமாறு அறிவுறுத்தி சென்றார்.
Tags:
மாவட்டம்