திருச்சிமாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை பகுதியைச் சேர்ந்த மார்ட்டின்மேரி (வயது 58). இவர்சப்போட்டா பழ விதையை 2 மாதங்களுக்கு முன்பு விழுங்கிவிட்டார். அது இரைப்பைக்குள் செல்லாமல் ஆபத்தாக மூச்சுகுழாய்க்குள் சென்று விட்டது. பின்னர் மெல்ல நகர்ந்து வலது பக்க நுரையீரலின் அடிப்பாகத்திற்குச் சென்று விட்டது.
இதனால் இடது பக்க நுரையீரல் வீங்கி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்தப் பெண்மணி திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை டாக்டர் எஸ்.பழனியப்பன் தலைமையில் டாக்டர்கள் சுந்தர்ராமன், சுரேஷ் ,சீனிவாசன், அறிவரசன் மயக்கவியல் டாக்டர்கள் உதவியுடன் பிளக்சிபிள் பிரான்ச்சோஸ்கோபி செய்யப்பட்டு சப்போட்டா பழவிதை இருக்குமிடம் கண்டறியப்பட்டது. 2 மாதங்கள் அதே இடத்தில் இருந்ததால் மூச்சுக்குழாய் உள்புறம் காயம் ஏற்பட்டு சதை பிடிப்பு ஏற்பட்டு, இரத்தம் வெளியாதலுடன் இருந்து வந்தது. இரு தினங்களுக்கு முன்பு நோயாளியின் அனுமதியுடன் ட்ராச் சோஸ்மி செய்து விதைவெளியே எடுக்கப்பட்டது.
மூச்சுத்திணறல் முழுவதும் குறைந்து நோயாளியால் சுலபமாக மூச்சுவிட முடிகிறது. நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் பழவிதை அகற்றப்பட்டதற்கு அந்தப் பெண்மணி மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.