மாடியில் இருந்த பிளக்ஸ பேனரை கீழே இறக்கும் போது உயர்மின்னழுத்த மின் கம்பி பட்டு மின்சாரம் தாக்கியதில் அக்கா தம்பி படுகாயம்

திருச்சி வடக்கு தாரா நல்லூர் வசந்தா நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 43). இவருக்கு தேவதர்ஷினி(20), முகிலன் (17), பொழிலன் என மூன்று பிள்ளைகள் உள்ளன.

இதில் முகிலன் சம்பவத்தன்று தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்த பிளக்ஸ் பேனரை கீழே இறக்கும் போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த மின் கம்பியில் பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. 

அப்போது அவரைக் காப்பாற்றும் முயன்ற தேவதர்ஷினியின் 2 கைகளும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டன. மேலும் முகிலன் ஒரு கை மற்றும் ஒரு கால் முழுமையாக தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தியாகராஜன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Post a Comment

Previous Post Next Post