மண்ணச்சநல்லூர் வட்டம், 94 கரியமாணிக்கம் ராமர் கோவிலில் சீதா திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையொட்டிஏலம் விடப்பட்டதேங்காய் ரூ.7500க்கு ஏலம் போனது.
94 கரியமாணிக்கம் அருகில் உள்ளவனத்தில் அமைந்துள்ளது. ராமர் கோவில்.
ராமர் இலங்கைக்கு சென்று போரிட்டு இராவணனைவென்று சீதையைமீட்டு வரும் வழியில் 94 கரியமாணிக்கம் அருகில் உள்ளவனத்தில் ராமரும் சீதையும் ஒருநாள் தங்கிஓய்வெடுத்துசென்றதாகவும் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசிமாதம் 3ஆம் சனிக்கிழமை சீதா திருக்கல்யாணம கோத்சவம் நடைபெறுவதுவழக்கம்.
சீதா திருக்கல்யாணமகோத்சவம் நடைபெற்றது. புண்யாகவாசனம், அனுக்ஞை, கும்பஆராதனம், 108 திவ்ய திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து
சீதாராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி சீதாராமர் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் அமர்த்தப்பட்டுமாலைகள் இட்டுஅபிசேகங்கள் நடைபெற்றுதிருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணவைபவத்தில் பூஜிக்கப்பட்ட 7 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் முதல் தேங்காய் ரூ.7500க்கும் கடைசிதேங்காய் ரூ.2700க்கும் ஏலம் போனது. 7 தேங்காய்களும் ரூ.30,300க்கு ஏலம் போனது. இங்கு பூஜிக்கபட்டதேங்காயைஎடுத்துசென்றுவீட்டில் உள்ளபூஜை அறையில் வைத்துபூஜை செய்துசாப்பிட்டால் திருமணம் நடைபெறும், குழந்தைபாக்கியம் கிடைக்கும், நினைத்தகாரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
எனவே பக்தர்கள் போட்டி போட்டு கொண்டு தேங்காயை ஏலம் எடுத்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உள்ளுர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.