இதனால் பாரதிராஜா அவ்வப்போது மது அருந்திவிட்டு சுதர்சன் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு மீண்டும் பாரதிராஜா மது போதையில் சுதர்சன் வீட்டின் முன்பு நின்று வசைபாடியுள்ளார். அப்போது தட்டிக்கேட்ட சுதர்சனை பாரதிராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 7 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடு புகுந்த சுதர்சனை தாக்க முயன்றனர்.
இதனால் உயிருக்கு பயந்த சுதர்சன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சுதர்சன் மனைவி சத்தியஜோதி (30) மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பாரதிராஜா உள்ளிட்ட 8 பேர் மீது மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து வயலூர் மஞ்சகோப்பு காலனி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சிலம்பரசன் (27), முருகேசன் மகன் கோபிகிருஷ்ணன் (24), ராஜலிங்கம் மகன் ரகுநாத் (25), வைரப்பெருமாள் மகன் விக்னேஷ் (23), ராஜேந்திரன் மகன் சுதர்சன் (22), சந்திரன் மகன் தமிழரசன் (24), சோமரசம்பேட்டையை சேர்ந்த பரமசிவம் மகன் வெங்கடேசன் (25) ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாரதிராஜா தலைமறைவானார்.
இந்நிலையில் பாரதிராஜாவை கைது செய்யக்கோரி சுதர்சனின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சமயபுரம் - மண்ணச்சந்லலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.