முசிறி அருகே அய்யம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பு கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியசாமி, திருஞானம், தாப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி நா.தியாகராஜன் பேசசபதாவது, திராவிட இயக்க வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டார். பின்னர் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் கொளத்தூர் மணி, மாநில சுயாட்சி என்ற தலைப்பில் மதிமாறன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வெள்ளூர் சூலக்கொள்ளை ரமேஷ் நகர, பேரூர் செயலாளர்கள் சிவகுமார், செல்வராஜ், விஜய் ஆனந்த், தர்மராஜ், தக்காளி தங்கராசு உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் பாசறையில் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.