பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பம்பாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் பாலசுப்ரமணியம், வேல்மணி.இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சொத்து சம்பந்தமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் பாலசுப்பிரமணியத்தின் உதட்டை வேல்மணி கடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:
மாவட்டம்