மகன் மது போதைக்கு அடிமை - பெண் கிடைக்கவில்லை ; மனவேதனையில் தாய் தற்கொலை

திருச்சி மேல தேவதானம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது30). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். 

இதனைப் பார்த்த அவரது தாய் செல்வராணி (50) மன அழுத்தத்திற்கு ஆளானார். மகனுக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்த பின்னரும் திருமணம் அமையவில்லை. இந்த நிலையில் செல்வராணி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்னேஷ் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post