மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் பின்புரம் கவுண்டம்பட்டி செல்லும் வழியில் மூவராயன் பாளையம், மூவானூர் செல்லும் வாகன ஓட்டிகள் அதிகம் இந்த வழியில்தான் செல்வது வழக்கம்.
தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்வதுண்டு, அதுவும் ஞாயிற்றுக்கிழமை சந்தை தினத்தில் மண்ணச்சநல்லூர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பொதுமக்கள் காணிக்கைகள் வாங்குதற்கு திருப்பைஞ்ஞீலி சந்தைக்குத்தான் வருவார்கள்.
இந்நிலையில் சாலை ஓரம் இப்படி குப்பைகளை கொட்டியும், குப்பைகளை நெருப்பு வைத்து கொளுத்துவதாலும் வாகனங்கள் இயக்குவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கோயிலில் இருந்து கொட்டப்படும் சிட்டி விளக்குகள் மற்றும் குப்பைகள் இங்கு தினமும் கொட்டுவதுன்டு.
அது மட்டுமின்றி தனியார் ஹோட்டல் காரர்களும் இரவு நேரத்தில் வந்து இப்படி கழிவுகளை கொட்டுவதால் நாய்கள் எப்போதும் இங்கு சூழ்ந்த வண்ணமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குப்பைகள் வேறு பகுதியில் கொட்டி நெருப்பு வைத்து எறிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்