துறையூர் அருகே பஞ்சாயத்து தலைவர் மின்கட்டணம் செலுத்தாததால் தெரு விளக்குகளை கழற்றி சென்ற மின்வாரிய ஊழியர்கள் ; இருளில் மூழ்கிய தெருக்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் ஆதனூர் கிராமம் உள்ளது. இங்குள்ள நாயக்கர் தெருவில் 13 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள் உட்பட வயதானனோர் வசித்து வருகின்றனர்.

திடீரென்று வந்த மின்சார ஊழியர்கள் இந்தப்பகுதி எந்தப் பஞ்சாயத்தின் கீழும் வரவில்லை. மின்கட்டணம் செலுத்தவில்லை என்பதால் தெரு விளக்குகளை கழற்றி சென்று விட்டனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் மின் ஊழியரிடம் கேட்ட பொழுது ஆதனூர் பஞ்சாயத்து தலைவர் பாலம்மாள் தெரு விளக்கு மின் கம்பங்கள் எங்கள் பஞ்சாயத்தில் வரவில்லை என கூறியதால் நடவடிக்கை எடுத்துள்ளோம் என தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இரவு நேரத்தில் தீப்பந்தம் கொழுத்தி அந்த பகுதி மக்கள் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தங்களது அடையாள அட்டைகளை அரசுக்கே திருப்பி அளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post