நகைச்சுவை நடிகர் திருமணம் வயலூர் முருகன் கோயிலில் நடைபெற்றது ; சிவகார்த்திகேயன் பங்கேற்றார்

 

பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்த் இவர் சென்னை 28, நட்பே துணை ன, மீசைய முறுக்கு, மெகந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சில பாடல்களையும் எழுதி உள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

விக்னேஷ் காந்தக்கும், இன்ஜினியரிங் பட்டதாரியான ராஜாத்திக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில் விக்னேஷ் காந்த் ராஜாத்தி திருமணம் நேற்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

திருமண புகைப்படத்தை வலைதளங்களில் விக்னேஷ் காந்த் வெளியிட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post