மண்ணச்சநல்லூர் அருகே திருப்பஞ்சலி சிவன் கோவில் பின்புறம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே பஞ்சாயத்து குப்பைகள் மற்றும் சிவன் கோவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இது பற்றி ஏற்கனவே நமது கரிகால பேரரசு பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால் எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதன் விளைவாக தற்போது சாலை ஓரமாக கொட்டப்பட்ட குப்பையால், மழை நீர் செல்லும் பகுதியிலும் குப்பைகளை கொட்டி இருந்ததால் தண்ணீர் போக முடியாமல் ரோட்டிலேயே நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியதாக உள்ளது.
முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
கொட்டப்பட்ட குப்பைகளும் மழை நீரும் சேர்ந்து தற்போது சாக்கடை போல காட்சி அளிக்கிறது
தண்ணீர் வடிவத்திற்கு எங்கும் இடம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.