மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி மாநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் மின் கட்டண உயர்வை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றி தெரியும் மாடு குதிரைகளால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் இடையூறுகளை தடுக்க கோரியும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோருதல், மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய கோருதல் , உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துமெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்