ரமேஷ் ஆழ்துளை கிணறு அமைக்கும் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். ரமேசின் முதல் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததால் இரண்டாம் தாரமாக கோமதியை திருமணம் செய்து கொண்டார். ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலைக்கு செல்லும் ரமேஷ் 6 மாதங்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவது வழக்கம். ரமேசுடன் அவரது பெற்றோரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சரிவர காது கேட்காத மனைவி கோமதிக்கும், ரமேசுக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு இருந்து வந்தது. ரமேஷ் மனைவியிடம் தனிகுடித்தனம் செல்வோம் என்று கூறியுள்ளார். ஆனால் கோமதி தனி குடித்தனம் செல்ல மறுத்ததால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கோமதி கணவர் ரமேஷிடம் பேசாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் கோமதி தனது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த ரமேஷ் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினார். இதனையடுத்து கோமதி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார்.
அதனைத்தொடர்ந்து ரமேஷ் அரிவாளை எடுத்து கொண்டு துறத்தி வந்தார். சிறிது தூரம் ஓடிய கோமதி தடுமாறி கீழே விழுந்தார். அங்கு வந்த ரமேஷ் அரிவாளால் கோமதியை கழுத்து, கை, கால் பகுதி என சரமாரியாக வெட்டினார். போலீசில் சரண் இதில் பலத்த காயம் அடைந்த கோமதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
பின்னர் ரமேஷ் அரிவாளுடன் சுமார் 1 கிலோ மீட்டர் .தூரம் நடந்தே ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இது தொடர்பாக முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஷ்மின், துறையூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.