பச்சமலை பகுதியில் 60 மி.மீ. மழை அளவு பதிவு ; மங்களம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

 

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சமலை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மங்களம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. டாப்செங்காட்டுப்பட்டி, புத்தூர், நச்சிலிப்பட்டி, பூதக்கால், கருவங்காடு, குண்டத்தாடி, சித்தூர், பெரும்பரப்பு, சேம்பூர், லட்சுமணபுரம், கம்பூர், தண்ணீர்பள்ளம், கீழ்க்கரை, சோளமாத்தி, என்.புதூர் உள்ளிட்ட தென்புறநாடு பகுதிகளில் பெய்த கனமழையால், 60 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். கொப்பம்பட்டி பகுதியில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சிக்கத்தம்பூர் ஊராட்சி பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. மாலை 6 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. மழையால் சிக்கத்தம்பூரை அடுத்துள்ள சேர்வைராயன் குட்டை நிரம்பி வழிந்து வந்த தண்ணீர், சிக்கத்தம்பூரில் உள்ள சாலைகளில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post