திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, இருங்களூர் கைகாட்டி, திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் சந்தை கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் வரும் நபர்களிடம் இருசக்கர வாகனம், செல்போன், நகை, பணம் உள்ளிட்டவைகளை ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்தனர்.
இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தொடர் விசாரணையில் போலீசார் இறங்கினர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதில் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாயினார். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்