இ சேவையில் மக்கள் எதிர்பார்க்கும் 10 அம்ச கோரிக்கைகள்

இ சேவையில் எதிர்பார்க்கப்படும்  மக்களுக்கு சிரமங்கள் இல்லா வகையிலான சேவைகள்..!

1. ரேசன் கார்டில் போன் நெம்பர் மாற்றம். மற்றும் வண்ண குடும்ப அட்டை பதிவிறக்கம்.

2. குடும்ப அட்டை ஆவணமானது அரசு, வங்கி மற்றும் அனைத்துவித ஆவண பயன்பாட்டுக்கும் அவசியமான ஒன்றாக இருப்பதால், குடும்ப அட்டையில் பிழைகளுடன் உள்ளோர் குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ளும் பொருட்டு அதற்கான வழிமுறைகள் இ சேவை யில் வழங்கப்பட்டால் வட்டார வழங்கல் அலுவலகத்திற்கு மக்கள் படையெடுத்து செல்வது மிகவும் குறையும்.

3. வண்ண வாக்காளர் அட்டை பதிவிறக்கம் (Like eAadhaar). ஆதார் எடுப்பதற்கு வாக்காளர் அட்டை முக்கிய தேவையாக உள்ளது.

4. பதிவுத்துறை ஆன்லைன் கட்டணம் செலுத்தும் சேவை. மற்றும் விக்கங்க சான்று பதிவிறக்க சேவை. (EC எடுப்பதில் Third Party Application Access செய்யப்பட்டதால் கட்டணமில்லா EC சேவை நிறுத்தப்பட்டது) பின் உள்நுழைவு வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

5. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு பதிவு செய்தல் மற்றும் அட்டை பிரிண்ட் செய்தல் சேவைகள்.

6. இ சேவை மையங்களுக்கு வங்கி சேவைகளுக்கான Business correspondence கொடுக்கும் பட்சத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.. 

7. மேலும் ஆதார் சேவைகளை இ சேவை மையங்களில் வழங்கினால் மக்கள் எளிதாக பயன் பெறுவார்கள்..

8. இ சேவையில் CAN EDIT செய்வது எளிதாக்கப்பட வேண்டும். அதிகபட்ச மக்கள் சான்றிதழ்களில் பிழைகளோடு, திருத்தம் செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

9. பிறப்பு சான்றிதழ்களில் பெயர் திருத்தம், பெயர் சேர்ப்பு போன்ற சேவைகள் செயல் படுத்தப்பட்டால் மக்களின் நேரம் மிச்சமாகும்.. (TNURBANEPAY & CRSTN.ORG தளங்களில் மேற்கண்ட சேவைகளுக்காக ஆப்ஷன் உள்ளது. ஆனால் செயல்பாட்டில் இல்லை). 

10. வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் இருந்தும் இல்லாமல் உள்ளது. அதாவது செயல்பாட்டில் இல்லை. SERVER ERROR ஆக உள்ளது.

மேற்குறிப்பிட்ட சேவைகள் நடைமுறைக்கு வந்தால் மக்கள் சிறப்பான பயன்களை விரைவாகவும் எளிதாகவும் பெறுவார்கள். மக்கள் வெகு தொலைவு பயணம் செய்வது, அலைக்கழிப்பு வெகுவாக குறையும். அரசுக்கும் நல்ல பெயர் உண்டாகும்...

Post a Comment

Previous Post Next Post