முசிறி அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை பறித்த குடுகுடுப்பைக்காரர் கைது

 


முசிறி மேல வடுகபட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி சம்பந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகே சென்ற குடுகுடுப்பைக்காரர் தோஷம் கழிப்பதாக கூறினார். இதனை உண்மை என்று நம்பிய அவர் தான் அணிந்திருந்த ¾ பவுன் நகைகளை கொடுத்தார். இந்தநிலையில் குடுகுடுப்பைக்காரர் அந்த பெண்ணை ஏமாற்றி நகைகளை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொட்டியத்தை அடுத்த வடக்கு அரங்கூர் முல்லை நகரை சேர்ந்த முத்தையன் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.


Post a Comment

Previous Post Next Post