திருப்பைஞ்ஞீலி அருகே கவுண்டம்பட்டியில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் வழிபடும் ஸ்ரீ மகா சூலினி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு வருடா வருடம் வைகாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கோவில் தேர் செய்து சுமார் 80 வருடங்களுக்கு மேல் ஆனதால், தேர் மர பொருட்கள் சேதமடைந்து இருந்ததால் போன வருடமே தேர் ஓடும்போது மேலும் சேதமடைந்தது.
அதனால் தற்போது கவுண்டம்பட்டி பொதுமக்கள் சேர்ந்து தேரை புதுப்பிக்க வேண்டி முழு முயற்சியில் இறங்கி உள்ளனர்.
மற்றும் தேரின் வெள்ளோட்டமானது சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் விடப்படும் என கோவில் பட்டையார்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்