ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து காங்கிரஸ் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த ராஜீவ் காந்தியை அவர் என்ன தியாகியா என்றும், அவர் பாலியல் குற்றவாளி என்றும் விமர்சித்துள்ளார்.
இதனை கண்டித்து இன்று திருச்சி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு இன்று (24.05.2022) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சீமானின் உருவப் படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும், காலால் மிதித்தும், படத்தை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டு தமிழக அரசு சீமானின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்