தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிவேல் வரவேற்றார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஸ்ரீரங்கன், ரெங்கராஜ், விஸ்வநாதன், வடமலை, கவிஞர் லோகநாதன், கந்தையா, பெரிய கோபால், திருப்பதி, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருச்சி மாநகர், மாவட்ட தலைவரும், மாநில அமைப்புக் குழு தலைவருமான மரு. பாஸ்கரன் தீர்மானங்களை நிறைவேற்றி விளக்கி பேசினார்.
கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடப்பு ஆண்டிலேயே தொடங்கிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாத வரை எந்த ஜாதிக்கும் சதவீதக் கணக்கில் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக் கூடாது.
திருச்சியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் திறப்பு விழாவை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்து முத்தரையரின் ஆதரவை பெற வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்