திருச்சி திருவெறும்பூர் பாரதிபுரம் பகுதியை சார்ந்த சுரேஷ் மகள் ஜெனிபர் மேரி. தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் இவர்,
அதே பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநராக பணி செய்து வரும் கவிராஜை காதலித்து வந்த நிலையில், ஜெனிபர் மேரி குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜெனிபர் மேரி, கவிராஜ் இருவரும் குளித்தலை கடம்பர் கோவிலில் திருமணம் செய்துகொண்டு, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். வழக்கை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா இரு வீட்டாரையும் அழைத்து பேசி காதல் ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்