குரூப் 2 தேர்வு ; திருச்சியில் 8057 பேர் எழுதவில்லை

 


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி(மேற்கு), திருச்சிராப்பள்ளி(கிழக்கு), ஸ்ரீரங்கம், இலால்குடி, முசிறி மற்றும் மணப்பாறை ஆகிய வட்டங்களில் 160 தேர்வு மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி காஜாமியான் 
மேல்நிலைப்பள்ளியிலும், சமது மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்ற இத்தோ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்தோ்வினை 50,019 பேர் எழுத இருந்த நிலையில் 41,962 (83.89 சதவீதம்) பேர் வருகை தந்து தோ்வை எழுதினா். 8057 (16.11சதவீதம்) பேர் தோ்வினை எழுதவில்லை.

Post a Comment

Previous Post Next Post