சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஃபரூக். பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவர், நேற்றிரவு மணிமுத்தாறு பகுதிக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த பிரபல ரவுடி விமலுக்கும், ஃபரூக்கிற்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், ஆத்திரமடைந்த விமல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஃபரூக்கை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த தகராறில் பலத்த காயமடைந்த ஃபரூக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான விமல் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:
மாவட்டம்