நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

 

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள 117 வீடுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீடுகளை இடிக்க கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி அ.தி.மு.க. கவுன்சிலரான கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவொற்றியூருக்கு இன்று நேரில் சென்றார்.

அண்ணாமலை நகர் பகுதிக்கு சென்ற அவர் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது சீமான் திடீரென மயங்கி கீழே சாய்ந்தார். கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் அவர் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சீமானை சுற்றி நின்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமான் மயங்கியதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரது முகத் தில் தண்ணீரை தெளித்து முதல் உதவி சிகிச்சையை மேற்கொண்டனர் இதன் பிறகு சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளித்து சீமான் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

பின்னர் சீமான் தனது காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். கடுமையான வெயில் காரணமாகவே சீமானுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post