திருச்சி மாவட்ட அ.தி. மு.க. மாவட்ட செயலாளர் கள் வெல்லமண்டி நடராஜன், ப.குமார், மு.பரஞ்ஜோதி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா காட்டிய வழியில் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் சொத்து வரி 150 சதவீதம் உயர்வு,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டம் நிறுத்தம் என்று கடந்த 11 மாத காலமாக தி.மு.க. அரசு மேற்கொண்டிருக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பாக நாளை (5-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகில் அ.தி.மு.க. கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று கண்டன பேருரையாற்றுகிறார்.
இதில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, வட்டகழக செயலாளர் கள், நிர்வாகிகள், எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை,
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணாதொழிற் சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் கோட்டத்தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர் கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள்,
தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி, கலை பிரிவு, செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.