திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி தற்கொலை



ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மகள் சௌமியா தேவி (22). இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் சிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் அவர் நேற்று விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் சௌமியா தேவி அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விடுதிக்கு சென்ற துவாக்குடி போலீசார் சென்று சௌமியா தேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post