திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகர் முழுவதும் நேற்று மாலை போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய பஸ்நிலையம் காமராஜர் சிலை அருகே போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை நிறுத்தி ஓட்டுநர் உரிமம், இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவற்றை சரி பார்த்தனர். வாகன பதிவு எண் சரியாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்