மகனை கொன்று தற்கொலை நாடகமாடிய தாய் கைது

 

திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா (வயது 58). இவரது மகன் விஜயராகவன் (27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கடந்த 7 ஆண்டுகளாக மன நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக விஜயராகவன் தன்னுடைய வீட்டில் கத்தியால் கழுத்தில் குத்தி தற்கொலை கொண்டதாக அவரின் தாய் புனிதா உறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விஜயராகவன் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், விஜயராகவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, தலையில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று போலீசாரிடம் அறிக்கை வழங்கப்பட்டது.

பின்னர் உறையூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வாலிபரை கொலை செய்தது யார்? என்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது விஜயராகவனின் தாய் புனிதா மீது போலீசார் சந்தேகப்பார்வை விழுந்தது. தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் மகனை கொன்று விட்டு தாய் நாடகமாடியது அம்பலம் ஆனது. 

இதையடுத்து புனிதாவை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில்,  தன்னுடைய மகன் விஜயராகவன் கடந்த சில தினங்களாக தனக்கு பல்வேறு ரீதியில் தொல்லை கொடுத்து வந்ததால் நான்தான் அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட புனிதா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Post a Comment

Previous Post Next Post