சமயபுரத்தில் சித்திரை தேரோட்ட முகூர்த்தக்கால்

 

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை மூகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (18&ந்தேதி) அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19&ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு மேல் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்ப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள், ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post