மண்ணச்சநல்லூர் வட்டம், பூனாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 3 லட்சம் மதிப்பிலான மேஜை தளவாடங்களை தனியார் மெட்டல் நிறுவனத்தினர் வழங்கினர்.
பூனாம்பாளையம் கிராமத்தில் நிடுநிலைப்பள்ளி சில ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதில் தற்போது 450 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து பயின்று வந்தனர். எனவே அவர்களுக்கு அமர்ந்து படிக்க எழுத இருக்கைகள் வேண்டும் என அப்பகுதியில் உள்ள மெட்டல் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தனர். அந்த நிறுவன நிர்வாகிகள் பள்ளிக்கு வந்து மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து பாடம் படிப்பதை கண்டவுடன் உடனடியாக அவர்களுக்கு மேஜை தளவாடங்களை வழங்க முன்வந்தனர். அதன்படி அதற்கான விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் சசிகலாகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்டல் நிறுவன நிர்வாக இயக்குநர் அர்ச்சுனன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 3 லட்சம் மதிப்பிலான மேஜை தளவாடங்களை மாணவ மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியை உஷாராணி நன்றி கூறினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோடப்பிள்ளை, மேனகா, ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்கொண்டனர்.