திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஸ்ரீ அழகாபட்டி ரோடு பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது36). லாரி டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த அவர் மனைவி லட்சுமியுடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் படுக்கை அறைக்கு சென்ற விஜயகுமார் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்