மணப்பாறை அருகே இரவு வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்து பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள கஸ்பா  பொய்கைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). இவர் கல்பாளையத்தான்பட்டி அருகே நாகம்மாள் கோவில் பகுதியில்  தினமும்  மாலை மற்றும்  இரவு  நேரங்களில் வேட்டைக்கு  செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவும் அதேபோல் சென்ற பிரகாஷ், இருள் சூழ்ந்திருந்த தால் நாகம்மாள் கோவில் அருகேயுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த  அவரைஅந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக் காக  அரசு  ஆஸ்பத்திரிக்கு அழைத்து  செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  இறந்தார். இதுகுறித்து  மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை  நடத்தி வருகிறார்கள்.

வேட்டைக்கு சென்றவர் கிணற்றில்  தவறி  விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Post a Comment

Previous Post Next Post