போக்குவரத்து விதிகளில் முக்கியமானது வாகனங்களில் பயன்படுத்தப்படும் நம்பர் பிளேட் இது. ஆங்கிலத்தில் மாநில, மாவட்ட குறியீடுகளும் இருக்க வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண் முறைகளில் மட்டுமே வாகன எண்களை குறிப்பிட வேண்டும். ஆனால் சிலர் தமிழ் ஆர்வமிகுதி காரணமாக வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட் முழுக்க முழுக்க தமிழில் எழுதி பயன்படுத்தி வருகின்றனர்.
இது மாநகரில் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார்களை கொதி நிலைக்கு கொண்டு செல்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் அபராதத்துக்கு உரிய குற்றம் என்கின்றனர் போலீசார்.
இதுகுறித்து போக்கு வரத்து ஒழுங்கு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், விதிகளை மீறி மாநகர பகுதியில் பலர் தமிழில்தான் எண்களை குறிப்பிடுவோம் என்று பைக்குகள் மற்றும் கார்களில் நம்பர் பிளேட்டுகளை மாட்டிக் கொண்டு வலம் வருகின்றனர். இப்படி எழுதி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிக்கும் போது சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஏதாவது ஒரு குற்ற செயல்களில் ஈடுபட்ட வாகனமாகவே தெரிய வருகிறது.
உதாரணத்துக்கு மாநகர பகுதிகளில் விதிமுறை மீறும் வாகனங்களை கண் காணித்து அபராதம் விதிக்க தானியங்கி கண்காணிப்பு காமிராக்கள் பயன்பாட்டில் உள்ளன.
தமிழில் எண்களை குறிப்பிடும் நம்பர் பிளேட் இதில் ரீடு ஆகாது. இது போன்ற சுற்றித்திரிபவர்களை நிறுத்தி வாகனங்களில் இருக்கும் ஆவணங்களை சரி செய்த பிறகே அனுப்பி வைக்கிறோம். சிலரின் செயல்பாடுகளால் போலீ சார்களுக்கு தலைவலி என்றார்.
இதுகுறித்து திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கேட்ட போது, வாகனங்களில் பயன் படுத்தப்படும் நம்பர் பிளேட் எந்த வாகனமோ அந்த அளவில் இருக்க வேண் டும் அதில் வெள்ளை நிற போர்ட்டில் கறுப்பு நிறத்தில் தான் எழுதப்பட வேண்டும். ஒவ்வொரு எழுத்துக்கும் இடையே 10 எம்.எம் இடைவெளி இருக்க வேண்டும் என்பது விதி.
இதுதவிர மிக முக்கிய மானது நம்பர் பிளேட்டுகளில் ஆங்கிலத்திலும் அன்றாடம் பயன்படுத்தும் எண்களில் தான் வாகன எண்களை குறிப்பிட வேண்டுமே தவிர தமிழில் எழுதினால் அது போக்குவரத்து விதிப்படி அபராதத்துக்கு உரிய குற்றம். மீறி வாகனங்களில் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
வாகனங்களில் பதிவெண்களை தமிழில் எழுதி பயன்படுத்தக்கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
தமிழகம்