அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காத போது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுகின்றனர். புதினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புதின் நிராகரித்துவிட்டார்.
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். மேலும், அவர் நம்மை நமது வீட்டிலேயே பிரிந்துவிடலாம் என நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார்... நாங்கள் தயார்' என்றார்.
'நாங்கள் தயார்’ ன்று பைடன் கூறுவது பொருளாதார ரீதியில் ரஷியா மீது மேலும் தடைகளை விதிப்பதா? அல்லது ரஷியா மீது நேட்டோ ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ளதா? என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது