திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சை மலைப்பகுதியில் கோரையாறு அருவி என்னும் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு
சிதம்பரம் மின் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 20) என்ஜினீயரிங் படித்து விட்டு ஆக்டிங் டிரைவராக பணி செய்து வந்தார். இவர், அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான கிருஷ்ணா (21), ஆதித்யா (20), ஆகாஷ் (19), சதீஸ் (22), சங்கர் (26), ராஜகுருநாதன் (20) ஆகியோருடன் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.
கூகுளில் நண்பர்கள் சர்ச் செய்து திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை கோரையாறு நீர்வீழ்ச்சியை தேர்வு செய்தனர்.
நீச்சல் தெரியாத இவர்கள் 7 பேரும் பச்சமலை வண்ணாடு ஊராட்சி புதூர் கிராமத்தில் உள்ள கோரையாறு நீர்வீழ்ச்சிக்கு காரில் சென்றனர்.
நீர் வீழ்ச்சி அருகே சென்ற ஹரிகிருஷ்ணன் ஒரு பாறை மீது ஏறி நீர்வீழ்ச்சியை பார்த்தபடி நிற்க, பின்னால் இருந்து அவரது நண்பர்கள்கேமராவில் படம் பிடித்தனராம். அப்போது நண்பர்களை பார்க்க ஹரிகிருஷ்ணன் திரும்பிய போது தான் நின்ற பாறையில் இருந்து வழுக்கி நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் விழும் இடத்தில் கிணறு போன்று ஆழமுள்ள பகுதியில் தவறி விழுந்தார்.
இதை கவனித்த மற்ற நண்பர்கள் அவரை தூக்கிவிட ஓடியபோது சதீஷூம், சங்கரும் ஆழம் தெரியாமல் அவரை காப்பாற்ற நீரில் குதித்தனர்.
3 பேரும் தத்தளித்துக் கொண்டிருந்த போது மற்ற நண்பர்கள் சதீஷ், சங்கரை காப்பாற்றினார்கள். ஹரிகிருஷ்ணனை காப்பாற்ற முடியாததால், அவர் நீரில் மூழ்கி இறந்தார்.
இச்சம்பவம் குறித்து வந்த தகவலின் பேரில் துறையூர் தீயணைப்பு வீரர்கள் வந்து ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்