ஆசிரியையிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சி நெம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி மருதமுத்து நகரை சேர்ந்தவர் கவுரி(வயது 49). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் ஏறி நெ.1 டோல்கேட்டில் வந்து இறங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ் பயணத்தின்போது மர்மநபர்கள் சங்கிலியை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கவுரி அளித்த புகாரின்பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post